ணவனும் மனைவியும், நாடி பலன் கேட்க வந்திருந்தனர். கணவனுக்கு சுமார் 55 வயது இருக்கும், மனைவிக்கு சுமார் 50 வயது இருக்கும், ஏழ்மையான தோற்றம். கருத்து, மெ-ந்த உடம்பு, கணவனின் முகம் இரத்தமின்றி வெளுத்து இருந்தது. என் முன்னே அமர்ந்த உடன், நான் எதுவும் கேட்காமலேயே, அந்த அம்மாள் எதற்காக நாடியில் பலன் கேட்க வந்தார்கள் என்று கூறினாள்.

Advertisment

ஐயா, இவர் எனது கணவர், நாங்கள் இருவரும் கட்டடம் கட்டும் சித்தாள் வேலை செய்து வருகின்றோம். 3 மாதத்திற்குமுன்பு வேலை செய்து கொண்டு இருக்கும் போது இவர் மயங்கி விழுந்து விட்டார். அவரை தர்மாஸ்பத்திரிக்கு கொண்டு போய் காட்டியபோது, அவரைப் பரிசோதித்த டாக்டர், இவருக்கு இரத்த ஓட்டக்குழாயில் அடைப்பு உள்ளது. அதனால் ஆப்ரேஷன் செய்யவேண்டும் என்று கூறினார்.

dd

"நாங்கள் அன்றாடம் கூலி வேலை செய்து, அதில் கிடைக்கும் பணத்தில் வயிறு வளர்த்து வருகின்றோம். ஆப்ரேஷன் செய்யும் அளவிற்கு பண வசதியில்லை. இப்போது ஆஸ்பத்திரியில் இலவசமாக கொடுக்கும் மாத்திரைகளைத்தான், சாப்பிட்டுக்கொண்டு இருக்கின்றார். எங்கள் ஊரில் உள்ள கோவில் பூசாரி தங்களைப் பற்றிக்கூறி, உங்களிடம் நாடியில் பலன் கேட்டால், இவர் நோய்க்கு ஏதாவது மூலிகை மருந்தோ அல்லது வேறு ஏதாவது வழிகளையோ கூறுவார் என்று சொன்னார். அதனால்தான் உங்களைப் பார்க்க வந்தோம்'' என்றாள்.

Advertisment

அந்த அம்மாள், சொன்னதையெல்லாம் பொறுமையாகக் கேட்டுக்கொண்டேன். ஒரு வேலையும் செய்யாமல், முன்னோர்கள் தேடிவைத்த சொத்தில், உண்டு, உறங்கி, கொழுத்துப் பெருத்தவர்களுக்குத் தான், கரையாத கொழுப்பு உடம்பில் சேர்ந்தும், நாவிற்கு சுவைதேடி, உடலுக்கு நன்மை தராத உணவுகளைச் சாப்பிடுபவர் களுக்குத்தான் இரத்த அழுத்தம், மாரடைப்பு, சர்க்கரை வியாதி போன்ற நோய்கள் பாதிப்பை தரும் என்று கேள்விப்பட்டுள்ளேன். இந்த மனிதரோ உழைத்து வாழ்பவன், ஒல்லியான உடல், உள்ள இவருக்கு எப்படி கரையாத கொழுப்பு இரத்தக் குழாயில் படிந்தது? என்று எண்ணி னேன்.

இதுவரை இதுபோன்று, நோய் தாக்கத்திற்காக யாருக்கும் ஓலை படித்தது இல்லை. அகத்தியர் இன்று இவர்களை அழைத்து வந்து உட்கார வைத்து விட்டார். ஓலையைப் படிப்போம், அகத்தி யர் ஏதாவது கூறி னால், அதைக் கூறுவோம். இல்லையென் றால் அவர்களை அனுப்பி விடு வோம் என்று எண்ணி ஓலையை எடுத்துப்படிக்கத் தொடங்கினேன்.

ஓலையில் அகத்தியர், எழுத்து வடிவாகத் தோன்றி பலன் கூறத்தொடங்கினார்.

"தோஷத்தின் விதமே விளக்கமாயுரைக்கக் கேளாய் பாசத் தோன் வாதை யெல்லாம் பறந்திட

ராஜன்கையில்

வாசித்த முன்னோர் வாங்கும் மாநிதி

நேசித்த தாலே வந்து நேரிட்டரெத்த காசம்'

Advertisment

இதன் பொருளையும், இரத்த சம்பந்த மான நோய், இவனுக்கு வந்த காரணத்தையும் கூறுகின்றேன்.

இவன் முன்பிறவியில், ராசங்கத்தில் பொறுப்புடைய உயர்ந்த பதவி வகித்தான். அப்போது, தன்னை நாடி வந்த புலவர் களுக்கும், வறியவர்களுக்கும், ஏழை மக்களுக் கும், அவர்கள் வறுமை தீர அரசன் கொடுத்த பணம், பொருட்கள், மனைகள், ஆடை ஆபரணங்களை, அவர்களை மிரட்டி பறித்துக் கொண்டதாலும், அரசாங்க கஜானாவில் இருந்து பெரும் நிதிகளை கொள்ளையடித் தாலும், பற்றிய தோஷத்தால் இந்தப் பிறவி யில் இவனுக்கு வறுமையான வாழ்க்கையும், இரத்த சம்பந்தமான இந்த நோயும் பற்றியது என்றார் அகத்தியர்.

இவன் நோய் தீர்வதற்கு நான் கூறும் மூலிகை இலையை காலையில் ஒரு கைப்பிடி அளவு பறித்து, வெறும் வயிற்றில், 90 நாள் வரை மென்று தின்று வரச்சொல். அல்லது மூலிகை இலையை இடித்து 30 மில்லிலிட்டர் சாறு எடுத்து குடித்து வரச்சொல், இவனுக் குண்டான இருதயம், இரத்த ஓட்ட சம்பந்த மான அனைத்து நோய்களும் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். புது இரத்தம் உடம்பில் ஊறி இரத்த சோகையும் குணமாகும். இந்த நிலையில் பிராண வாயு இருப்பதால், (ஆக்ஸிஜன்) மூச்சுத் திணறல், மூச்சுவிடுவதில் சிரமம் இருக்காது. சுவாசம் சீராக ஓடும்.

இந்த மூலிகைச் சாறு இரத்தக் குழாயில் மணல்போல் படிந்த கரையாத கொழுப்பு களை கரைத்து, அடைப்புகளை போக்கி விடும். இரத்தத்தில் கரையாத கொழுப்பு இனி சேராமல் தடுத்துவிடும். இருதயம் பலம்பெற்று எந்த அதிர்ச்சியையும் தாங்கும் சக்திபெறும்.

(இந்த மூலிகையை இருதய அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் சாப்பிட்டுவந்தால் வெகு சீக்கிரம் பூரண நலம் பெறலாம். அதிகமான மாத்திரைகளை சாப்பிட தேவையில்லை. புகையிலை, பொடி, பீடி, சிகரெட், பான்பராக் என இவைகளை உபயோகிப்பவர்களுக்கு அதில் உள்ள நிகோடின் என்ற விஷத்தால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கும்.)

இவன் வறியவன், ஏழை என்பதால், இவனுக்கு நோய் தீர வழி கூறினேன். இவன் அறுவை சிகிச்சை செய்துகொள்ள வேண்டாம் என்று கூறிவிட்டு மேலும் இந்த மூலிகை சாப்பிட்ட மூன்று நாட்களில் என்ன நிகழ்வு, 30 நாள் சாப்பிட்ட பின்பு, சரீரத்தில் என்ன நல்ல முன்னேற்றம், 90 நாள் சாப்பிட்டு முடித்த பிறகு சரீரம் பெறும் சக்தியைப் பற்றி விளக்கமாகக் கூறிவிட்டு ஓலையில் இருந்து மறைந்தார்.

அந்த தம்பதியரிடம் அகத்தியர் கூறியதைச் சொல்லி, அந்த மூலிகை எப்படி இருக்கும்? என்ற அடையாளங்களையும், அவை தழைத்து வளரும் இடங்களையும் கூறிவிட்டு, அகத்தியர் கூறிய நாட்களில் மருத்துவரி டம் சென்று பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்று கூறி அனுப்பி வைத்தேன். அவர்கள் அப்பொழுதே தன் நோய் நீங்கி, சுகம்பெற்று விட்டவர்கள் போல் மகிழ்ச்சியுடன் விடை பெற்றுச் சென்றார்கள்.

அகத்தியர் முதலான 18 சித்தர்களும், கடவுளை கோவில்களில் வணங்கியும், பூஜை, வழிபாடு, மந்திரங்களில் தேட வில்லை. ஏழைகளின் சிரிப்பிலும், நலனிலும் இறைவனைக் கண்பார்கள் என்பதையும், முன்பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் இப்பிறவியில் நோயாகவும் தாக்கி சிரமங்கள் தந்து அனுபவிக்கச் செய்யும் என்பதையும், அன்று நான் புரிந்துகொண்டேன்.

செல்: 99441 13267